யானைகளை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடும் வாகன ஓட்டிகள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை
சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பவானிசாகர்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடியபடி அடிக்கடி வனச்சாலையை கடக்கின்றன. அப்போது சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகளை யானைகள் ஒடித்து தின்னும்.
இந்தநிலையில் நேற்று காலை சத்தியமங்கலம்- மைசூர் சாலையில் ஆசனூர் அருகே சாலையோரம் நின்றபடி யானை ஒன்று மரக்கிளைகளை ஒடித்து தின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி டிரைவர், யானையை கண்டதும் நிறுத்தி உள்ளார். பின்னர் யானையின் அருகே சென்று லாரியில் இருந்தபடி செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் அந்த வீடியோ, புகைப்படங் களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து பவானிசாகர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் அடிக் கடி சாலையை கடக்கின்றன. மேலும், சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகளை யானைகள் ஒடித்து தின்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும், வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள் இதனை கண்டுகொள்வதில்லை. தற்போது கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரங்களில் நிற்கும் யானை அருகே சென்று செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மேலும் சமூக வலைதளங்களிலும் பதிவிடுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், யானைகளுக்கு தொந்தரவு செய் யும் வாகன ஓட்டிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.