நாகூர் பகுதியில் குப்பைகள் தெருக்களில் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

நாகூர் பகுதியில் குப்பைகள் தெருக்களில் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2018-08-02 22:30 GMT
நாகூர்,

நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகர் தெற்கு பகுதியில் 75 குடிசை வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குப்பை தொட்டி வசதி இல்லாததால் குப்பைகள் தெருக்களில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் தெருக்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுகுறித்து பலமுறை நாகை நகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பாதாள சாக்கடை குழாய் மூடி திறந்து கிடப்பதால் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லையும், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவுகிறது. எனவே நாகூர் அம்பேத்கர் நகர் தெற்கு பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனே அகற்றி, திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்