கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று கூறுவது தவறு! சுகாதாரத்துறை துணை இயக்குனர் பேட்டி
கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று கூறுவது தவறு’ என்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி கூறினார்.
கோவை,
கோவையை அடுத்த கோவைப்புதூரில் தனியார் நிறுவனம் சார்பில், சுகப்பிரவசத்துக்கு ஒருநாள் இலவச பயிற்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அளித்த புகாரின்பேரில் ஹீலர் பாஸ்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில சுகாதாரத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்களின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் கோவைப்புதூரில் உள்ள ஹீலர் பாஸ்கரின் தனியார் நிறுவனத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பானுமதி கூறியதாவது:-
ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தால் தான் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் வகையில் சட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லக் கூடாது என்று கூறுவது தவறு. அதுபோல் சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று மக்களிடையே தகவல் பரப்புவதும் தவறு. இதுபோன்ற தகவல்களை கர்ப்பிணிகள் நம்பி ஏமாறக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
‘கருத்தரிக்கும் பெண்கள் 9 மாதம் வரை முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பார்கள். டாக்டரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக முடிவெடுப்பது தவறு. புகாரின் அடிப்படையில் சுகப்பிரசவம் குறித்து விளம்பரம் செய்த நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிக்க அவர் அங்கீகாரம் பெற்றுள்ளாரா? அங்கீகாரம் பெற்ற மையத்தில் படித்து அவர் சான்றிதழ்கள் பெற்றுள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எப்படி இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் ரத்த பரிசோதனை செய்து கொள்ளாமல் சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று தகவல் பரப்புவது தவறு. மேலும் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் சுகப்பிரசவம் என்பது சாத்தியமில்லை. வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதால் தான் தாய்-சேய் இறப்பு விகிதம் அதி கரித்து வருகிறது. இதை தடுக்க தான் கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தால் தான் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் வகையில் சட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லக் கூடாது என்று கூறுவது தவறு. அதுபோல் சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று மக்களிடையே தகவல் பரப்புவதும் தவறு. இதுபோன்ற தகவல்களை கர்ப்பிணிகள் நம்பி ஏமாறக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.