திருப்பூர், பல்லடம், அவினாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்: சொத்து வரி உயர்வை கண்டித்து நடந்தது

சொத்துவரி உயர்வை கண்டித்து திருப்பூர், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-02 00:05 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ரவி, மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் சொத்து வரி உயர்வை கண்டித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநகராட்சி மண்டல செயலாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், செந்தில்குமார், வடிவேல், ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல், சொத்துவரி உயர்வை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சாகுல் அமீது, காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல், அவினாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராசு தலைமை தாங்கினார். கோபால், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்