பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-01 22:54 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர். நகர் கிழவன் தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பர்கூரை சேர்ந்த கோதண்டராமன் (வயது 45), சுந்தர்ராஜன் (32), புதூரை சேர்ந்த விஜயகுமார் (38), எம்.ஜி.ஆர். நகர் வேலு (37) ஆகியோர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்தனர்.

இதே போல தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தளி அருகே உள்ள மெல்லுமார் என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த சிவா (28), பரமேஸ் ஆச்சாரி (46), பசவனதொட்டியை சேர்ந்த ரமேஷ் (39) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்