திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-08-01 22:22 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் குத்தம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 லாரியையும், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த குத்தம்பாக்கத்தை சேர்ந்த முருகையன் (வயது 52), அழகுராஜா (30), குணா (32), கவியரசு (25), உடன் வந்த சரண் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

எறையூர்

அதேபோல திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் எறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மினி டெம்போவை பறிமுதல் செய்தனர்.

போலீசாரை கண்டதும் டிரைவர் மினி டெம்போவை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புட்லூர்

அதேபோல திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் புட்லூர் கூவம் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியில் இருந்தவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர் யார் என தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்