மகன்-மகள்களுக்கு திருமணம் ஆகாததால் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு மனைவி தீக்குளித்து தற்கொலை
கும்பகோணம் அருகே மகன், மகள்களுக்கு திருமணம் ஆகாததால் மனவேதனை அடைந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் காளிமுத்து நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன் (வயது 71). ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. இவரது மனைவி மல்லிகா (65). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மல்லிகா தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதற்காக வரன் பார்த்து கொண்டு இருந்தார். நீண்ட நாட்களாக வரன் தேடியும் திருமணம் செய்து வைக்க முடியாததால் மல்லிகா மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மல்லிகா, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.