குற்றாலத்தில் நீச்சல் போட்டி நெல்லை மாணவ-மாணவிகள் பரிசுகளை குவித்தனர்

குற்றாலம் சாரல் விழாவில் 5-வது நாளான நேற்று நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட மாணவ-மாணவிகள் அதிக பரிசுகளை வென்றனர்.

Update: 2018-08-01 22:00 GMT
தென்காசி,

குற்றாலம் சாரல் விழாவில் 5-வது நாளான நேற்று நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட மாணவ-மாணவிகள் அதிக பரிசுகளை வென்றனர்.

சாரல் திருவிழா

சாரல் திருவிழாவின் 5-வது நாளான நேற்று நகர பஞ்சாயத்திற்கு சொந்தமான நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் தொடங்கி வைத்தார்.

நீச்சல் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், 6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் விருதுநகர் மாவட்டம் ராமச்சந்திர ராகுல் முதல் பரிசும், செல்வ குமார் 2-வது பரிசும், நெல்லை மாவட்டம் அபிஷேக் 3-வது பரிசும் பெற்றனர். 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நெல்லை மாவட்டம் ஜெபின் முதல் பரிசும், தனு வர்ஷன் 2-வது பரிசும், செந்தில்வேல்ராஜன் 3-வது பரிசும் பெற்றனர்.

10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நெல்லை மாவட்டம் சுப்பிரமணியன் முதல் பரிசும், சந்தோஷ் 2-வது பரிசும், கவின் சாய் 3-வது பரிசும் பெற்றனர். 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நெல்லை மாவட்டம் அபே கிருஷ்ணா முதல் பரிசும், ஜென்சன் ஆசீர் ராஜ்பாலன் 2-வது பரிசும், குமார் பெருமாள் 3-வது பரிசும் பெற்றனர்.

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நெல்லை அப்துல் ரகுமான் முதல் பரிசும், தினேஷ் 2-வது பரிசும், சிவநாதன் 3-வது பரிசும் பெற்றனர். 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் குருலால் முதல் பரிசும், சுப்பையா என்ற ரமேஷ் 2-வது பரிசும் பெற்றனர். பொது பிரிவில் நெல்லை மாவட்டம் பிரவின் முதல் பரிசும், ராம் குமார் இரண்டாம் பரிசும், மகேந்திரன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பெண்கள் போட்டி

பெண்களுக்கான நீச்சல் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நெல்லை மாவட்டம் லயா உதெஷிகா முதல் பரிசும், செல்ல ஷிவானி இரண்டாம் பரிசும், 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நெல்லை மாவட்டம் அக்‌ஷயா முதல் பரிசும், அனன்யா இரண்டாம் பரிசும், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் பிரிய தர்ஷினி முதல் பரிசும், செல்ல பிரியா யாலின் இரண்டாம் பரிசும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹிதயா பவுஸியா முதல் பரிசும், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் அபிஷா ஏஞ்சலின் முதல் பரிசும், சஸ்வதா இரண்டாம் பரிசும் பெற்றனர்.

மேலும் செய்திகள்