திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்

திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார்.

Update: 2018-08-01 22:30 GMT

திசையன்விளை, 

திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார்.

புதிய தாலுகா இன்று உதயம்

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிதாக தனி தாலுகா இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

கலெக்டர் ஆய்வு

இதை தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் அமைய உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று திசையன்விளைக்கு சென்றார்.

திசையன்விளை பகுதியில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை, தற்காலிக தாலுகா அலுவலகத்துக்கு தேர்வு செய்தார். பின்னர் அங்கு தாலுகா அலுவலகம் செயல்படுவது குறித்து அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், திசையன்விளை நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஏ.கே.சீனிவாசன், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்