தனது சொத்துகளை மீட்டு தரக்கோரி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் படுத்து போராட்டம்

தனது சொத்துகளை மீட்டு தரக்கோரி முதியவர் மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் படுத்து கொண்டு போராட்டம் செய்தார்.;

Update: 2018-08-01 22:00 GMT

மதுரை,

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 80). இவருடைய மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். விஜயனின் 18 ஏக்கர் நிலத்தை அவருடைய உறவினர்கள் மிரட்டி கையெழுத்து வாங்கி அபகரித்து கொண்டனராம். எனவே அவர் தனது சொத்தை மீட்டு தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் விஜயன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். திடீரென்று அவர் கலெக்டர் அலுவலக பகுதியில் படுத்து கொண்டு போராட்டம் செய்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அதில் நடந்த சம்பவம் அனைத்தையும் கூறினார். பின்னர் போலீசார் மீண்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறுவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து அவர் மீண்டும் கலெக்டரை சந்தித்து தனது சொத்தை மீட்டு தரமாறு மனு கொடுத்தார்.

மேலும் செய்திகள்