மாவட்டத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட டாக்டர்கள்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 300 டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
தமிழக அரசு மருத்துவர்கள் மத்திய அரசு மருத்துவர்களை விட அதிகப்படியான சுமையுடன் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. எனவே தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் இம்மாதம் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுமார் 300 டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருகிற 20-ந் தேதி வரை தொடர்ந்து கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட இருப்பதாகவும், அரசு கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் செப்டம்பர் மாதம் 21-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.