மானாமதுரையில் பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து போலீஸ்காரர் பலி

மானாமதுரை அருகே உள்ள அரிமண்டபம் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

Update: 2018-08-01 21:45 GMT

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள அரிமண்டபம் பகுதியை சேர்ந்த ஆதிமூலம். இவருடைய மகன் ஜீவா (வயது 32). இவர் மானாமதுரையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், ஜெயமாலினி என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மானாமதுரை சீனியப்பா நகரில் அவர்கள் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தனது வீட்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் கிடந்த இரும்பு கம்பியை அப்புறப்படுத்துவதற்காக எடுத்தார். அப்போது வீட்டின் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் ஜீவா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் இறந்துபோனார்.

 இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவாவின் மனைவி ஜெயமாலினி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்