வேலூர் அரசு மருத்துவமனையில் அதிக பிரசவங்கள் நடக்கிறது தாய்ப்பால் வார விழாவில் கலெக்டர் பேச்சு
சென்னைக்கு அடுத்தப்படியாக வேலூர் அரசு மருத்துவமனையில் தான் அதிக பிரசவங்கள் நடக்கிறது என்று வேலூரில் நடந்த தாய்ப்பால்வார விழாவில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நேற்று நடந்தது. விழாவுக்கு குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி டீன் சாந்திமலர், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் திருமால்பாபு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் தீனதயாளன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது-
தாய்ப்பால் ஊட்டுவது வாழ்வின் அஸ்திவாரம். முந்தைய காலத்தில் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் போது தாய்ப்பாலின் முக்கியத்துவம் அறிந்திருந்தனர். ஆனால் நாளடைவில் கூட்டுக்குடும்பங்கள் குறைந்துபோனதால் தாய்ப்பாலின் முக்கியத்துவமும் மறையத் தொடங்கிவிட்டது. எனவே, தாய்மார்களிடம் தாய்ப்பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமிழக அரசே இந்த தாய்ப்பால் வார விழாவை நடத்துகிறது. இதில் தாய்ப்பால் எப்படி வழங்க வேண்டும். தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக கட்டிகள் போன்றவை வராது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் வசதிக்காக தாய்ப்பாலூட்டும் அறை மற்றும் தாய்ப்பால் சேமிப்பு வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் மருத்துவக்குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னைக்கு அடுத்தப்படியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் பிரசவம் அதிகளவில் நடக்கிறது.
மேலும் இந்த மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அதற்கேற்ப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதாலே தான் வெற்றிகரமாக அதிக பிரசவங்கள் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பயனடைகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துறை தலைவர்கள் ஸ்ரீகாந்த், மோகன்காந்தி, குழந்தைகள் நலத்துறை டாக்டர்கள் உதயதீபா, சாய்லட்சுமி, சரண்யா, சிவகாமி, சங்கீதா, மேகலாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.