யானைகவுனியில் ரூ.10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

யானைகவுனியில் ரூ.10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-07-31 23:02 GMT
சென்னை, 

யானைகவுனி பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் சுப்புராயலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி வாசுதேவன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது தனியாருக்கு சொந்தமான கடையில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது.

இவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி வாசுதேவன் கூறுகையில், ‘மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. யானைகவுனி பகுதியில் ஆய்வு செய்தபோது 142 மூட்டைகளில் 8½ டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளோம். இந்த பிளாஸ்டிக் பைகள் சேலத்தில் உள்ள 4 தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்’ என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்