வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் உண்ணாவிரதம்

வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் பட்டுக்கோட்டையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2018-07-31 22:45 GMT
பட்டுக்கோட்டை,

கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கான வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். நியாயமான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். வாடகை செலுத்துபவர்களின் பெயரில் ரசீது வழங்க வேண்டும். வாடகை பாக்கியை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். தவணை முறையில் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகே உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். வக்கீல் ஜெயவீரபாண்டியன், போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க நிர்வாகிகள் மகேந்திரன், கோபாலகிருஷ்ணன், காளிதாஸ், கோபால், பன்னீர்செல்வம், செம்பை கோவிந்தராஜ், விஜயகுமார், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி குழந்தைவேலு உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்