கொடுமுடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுமுடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊஞ்சலூர்,
கொடுமுடி புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சொத்து வரி, வீட்டு வரியினை உயர்த்தி அறிவித்த அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கோஷமிட்டனர். கொடுமுடி ஒன்றிய செயலாளர் எம்.குணசேகரன், துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் பேசினார்கள். இதில், கட்சி நிர்வாகிகள் கந்தசாமி, ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் காசிபாளையம் கிளை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.