கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கு: பெண் ஊழியரை சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை
புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் சிக்கிய பெண் ஊழியரை சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதிய தகவல்கள் வெளியாயின.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூபதி கண்ணன் (வயது 45), கடந்த 28-ந்தேதி மாத்தூர் அருகே அரைவட்ட சுற்றுச்சாலை பகுதியில் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வரும் திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யாவை பிடித்து விசாரித்து வருகின்றனர். பூபதி கண்ணனுக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையேயான பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.
சம்பவத்தன்றும் பூபதி கண்ணனுடன் சவுந்தர்யா காரில் வந்தார். மாத்தூரில் அரைவட்ட சுற்றுச்சாலையில் காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் பூபதி கண்ணனை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர். கொலையாளிகள் சவுந்தர்யாவுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில் தான் சவுந்தர்யாவின் முன்னாள் காதலனான லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் விழுந்தது. அவர் தலைமறைவாக உள்ளார். அவரது செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. பூபதி கண்ணனுடன் சவுந்தர்யா தொடர்பில் இருந்ததால் ஆத்திரத்தில் முன்னாள் காதலன் கொலை செய்தாரா? என விசாரிக்கின்றனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் பூபதி கண்ணன் கொலை சம்பவத்தில் சவுந்தர்யாவுக்கு முழு தொடர்பு இருப்பது உறுதியானது.
சம்பவத்தன்று அவருடன் இருந்த மர்மநபர் யார்? என்பதை தான் உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சவுந்தர்யாவும் அதுகுறித்த தகவலை தெரிவிக்காமல் மறுத்து வருகிறார். திடீரென தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என நேற்று பிடிவாதம் பிடித்தாராம்.
போலீசார் தங்களுக்குரிய பாணியில் பெண் போலீசார் மூலம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பூபதி கண்ணன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சவுந்தர்யாவை போலீசார் நேற்று அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காரில் வந்தது, இருந்தது குறித்து விளக்கி கூறியுள்ளார். இதில் புதிய தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறியதாவது:-
சவுந்தர்யாவை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தினோம். காரில் அவர் இருந்தது பற்றி கூறினார். காரில் ஒரு முறையும், வெளிப்பகுதியில் ஒரு முறையும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் தான் திடீரென ஒருவர் வந்து அவரை கொலை செய்ததாக கூறுகிறார்.
அதன்பின் சவுந்தர்யா நடந்தே வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். இதனையே அவர் திரும்ப, திரும்ப கூறினார். அந்த நபர் யார்? என்பதை அவர் வாயால் சொல்ல மறுக்கிறார். நாங்கள் எங்களது புலன் விசாரணை மூலம் துப்புதுலங்கி வருகின்றோம். பூபதி கண்ணன் கொலையில் சவுந்தர்யாவோடு இன்னொருவருக்கும் தொடர்பு உள்ளது.
சவுந்தர்யா தனக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சத்தில் ஒரு வீடு வாங்கி தருமாறு பூபதி கண்ணனிடம் கூறியிருக்கிறார். அவர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டாரா? என்பது தெரியவில்லை.
கொலையான பூபதி கண்ணனின் மனைவியான அனுராதா திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரிடமும் விசாரணை நடத்தினோம். கணவன்-மனைவி குடும்பத்தில் உறவு நன்றாக இருந்துள்ளது. அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை.
இருப்பினும் வேறு கோணத்திலும் மற்றொரு தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
பூபதி கண்ணனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து சவுந்தர்யாவிடம் தகவல் பெற்றதும் அவரை கைது செய்து விடுவோம். இந்த வழக்கில் பாதிக்குமேல் விசாரணையை முடித்து விட்டோம். இன்று (புதன்கிழமை) அல்லது நாளைக்குள் (வியாழக்கிழமை) தீர்வு கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.