காஞ்சீபுரத்தில் கஞ்சா விற்ற தந்தை-மகன் கைது
காஞ்சீபுரம் பல்லவர்மேடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காஞ்சீபுரம்,
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த பல்லவர்மேட்டைச்சேர்ந்த பழனி என்ற கொக்கு பழனி(வயது 46) மற்றும் அவருடைய மகன் ராம்குமார்(21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான தந்தை-மகன் இருவரிடம் இருந்தும் 1½ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.