கொடிநாள் அதிக வசூல் செய்த கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறைக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
கொடிநாள் அதிக வசூல் செய்த கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறைக்கு பாராட்டு சான்றிதழ், கேடயத்தை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 187 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கதிரவன், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து கொடி நாள் வசூலில் 2015-ம் ஆண்டு அதிக வசூல் மேற்கொண்ட கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரியிடம் கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
மேலும் முன்னாள் படைவீரர் வாரிசுதாரர்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து தற்போது மேற்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்தை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.