28 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் புகார்
28 ஆண்டுகளாக குடிநீர்வசதி இல்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக்கொடுத்தனர்.
தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி பிருந்தாவனத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியும் மக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தண்ணீர் உப்புநீராக வருவதால் குடிக்க முடியவில்லை. இதனால் கடந்த 28 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் 1 கி.மீ. தூரம் சென்று குடிநீரை பிடித்து வருகிறார்கள்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்புநீரை குடிப்பதால் மக்கள் சிறுநீரக கல் பிரச்சினை, குடல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன. எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர்வசதி செய்து தர வேண்டும். மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். சாலைகளை சீர் செய்து தர வேண்டும். பொது கழிவறை கட்டித்தர வேண்டும். பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
தஞ்சை பூக்காரத்தெருவை சேர்ந்த எஸ்.பி.செல்வராஜ், கலெக்டர் அண்ணாதுரையிடம் கொடுத்த ஒரு மனுவில், தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கழிவு நீரை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ள தர்கா அருகில் திறந்த வெளியில் திறந்து விடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த ஹோட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தவும், அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள திடக்கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.