கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் எடை கொண்ட 45 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இதனையடுத்து நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கங்கன்தொட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த இளம்பெண் அருணா(வயது 33) என்பவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் எடைகொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல புதுகும்மிடிப்பூண்டியை அடுத்த பாலீஸ்வரன்கண்டிகை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த சாந்தி(48) மற்றும் அவரது உதவியாளரான மோகனசுந்தரம்(25) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 150 கிராம் எடைகொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட மொத்தம் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் எடைகொண்ட 45 கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.