கருங்கல்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-07-30 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு தொகுதி தலைவர் மன்சூர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அசன்அலி, பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கிம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்ந்துள்ளதை கண்டித்தும், இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் குறிஞ்சி பாட்சா, ஊடக பொறுப்பாளர் சபீர் அகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் உபைதுல்லா, செயலாளர் சாதிக்பாட்சா, எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்