கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்தவரால் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மண்எண்ணெய் கேனுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும், பொதுமக்களில் சிலர் மண்எண்ணெயை பாட்டிலில் கொண்டு வந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார், மனு கொடுக்கும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பைகளில் வைத்து கொண்டு செல்கிறார்களா? என்பதை சோதனையிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு குடும்பத்தினர் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த கட்டை பையில் மண்எண்ணெய் கேன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த மண்எண்ணெய் இருந்த கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த குடும்பத்தினர் நாங்கள் அரசு புறம்போக்கு பாதையை எங்கள் நிலத்திற்கு பாதையாக பயன்படுத்தி வருகிறோம்.
அதனை 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த பாதையை ஆக்கிரமித்து, எங்களை அந்த பாதையில் நடக்க விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாங்கள் மண்எண்ணெயை ஊற்றி நாங்கள் சாகப்போகிறோம் என்றும், எங்களை தடுக்காதீர்கள் என்று கெஞ்சி கதறினர். இதையடுத்து அந்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பகுதியில் உள்ள காட்டுக்கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் அந்தாளிசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. அவர் தனது தாய் ராஜம்மாள், மூத்த தங்கை பவளக்கொடி, இளைய தங்கை மலர்கொடி மற்றும் பவளக்கொடியின் 2 மகன்கள் ஆகியோருடன் மனு கொடுக்க வந்திருந்தார். அந்த மனுவில் லாடபுரம் பகுதியில் உள்ள எனது நிலத்தில் கொட்டகை போட்டு குடியிருந்து விவசாயம் செய்து வருகிறேன்.
அந்த நிலத்திற்கு பாதையாக அரசு புறம்போக்கு பாதையை பயன்படுத்தி வருகின்றேன். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் அந்த பாதையில் எனது குடும்பத்தினரை செல்ல விடாமல் தடுத்தும், அந்த பாதையை பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி ஆக்கிரமித்து நடக்க விடாமல் தொந்தரவு செய்வது மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்கள்.
மேலும் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் எனது பட்டாவில் உள்ள 4 புளியமரங்களில் ஏறி மரக்கிளைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் புகார் கொடுத்தேன். அவரும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் எனது புளிய மரத்தின் கிளைகளை தீ வைத்து கொளுத்திவிட்டு, என்னையும் எனது குடும்பத்தினரையும் தீ வைத்து கொளுத்தாமல் விட மாட்டேன் என்று தகாத வார்த்தையால் திட்டி விட்டு சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த அரசு புறம்போக்கு பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த பாதையில் நாங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அந்தாளிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த மனுவை கலெக்டர் சாந்தாவை சந்தித்து கொடுத்து விட்டு சென்றனர்.
குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், கொத்தவாசல் ரேஷன் கடை அருகே இருந்த குடிநீர் தொட்டியின் மோட்டார் எந்திரம் காணாமல் போய்விட்டன. அதனை கண்டுபிடித்து அதே இடத்தில் வைத்து தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற வேண்டும். கொத்தவாசல் காலனியில் அமைத்த குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பெரிய வெண்மணி பஞ்சாயத்து மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பொதுமக்களிடம் பெற்று கொண்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.