தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், அதில் பெண்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் அதனை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
பூந்தமல்லி,
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் நடந்த பெண்கள் இணைப்பு குழுவின் மாநில மாநாட்டை தொடங்கி வைத்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதில் பெண்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் அதனை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் பெண்கள் இணைப்பு குழுவின் 24–வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில தலைவி ஷீலு தலைமை தாங்கினார்.
பெண்கள் இணைப்பு குழு நிர்வாகிகள் சகாயமேரி கனகராஜ், சந்திரா, கவுசல்யா, கவுரி, பொன்னுத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் பாண்டியராஜன், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:–
தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டஉதவிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் விதமாக மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 500 மதுபானக்கடைகளில் 2 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் முழுவதுமாக மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதில் பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இதனை பெண்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதேபோல் பெண் குழந்தைகளை அடையாளம் கண்டு அழிக்க துணை போகும் ‘ஸ்கேன் சென்டர்கள்’ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக போலீசார் மற்றும் நீதித்துறைகளில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். ரேஷன் கடை மற்றும் சத்துணவு திட்டத்தில் சிறுதானிய பயிர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன், திருவள்ளூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புட்லூர் சந்திரசேகர், கடம்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் உள்பட பெண்கள் இணைப்பு குழுவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் 15 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.