விதான சவுதாவில் இன்று நடக்கிறது : குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு,
கலெக்டர்களுடன் மழை பாதிப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று பணியாற்றி வருகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
இதில் மந்திரிகள், தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர்கள், மண்டல கமிஷனர்கள், அரசு துறைகளின் முதன்மை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதில் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, மண்டியா, குடகு, கார்வார், பெலகாவி உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து தகவல்களை குமாரசாமி பெறுகிறார்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மேற்கொண்ட நிவாரண உதவிகள், செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார். மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு குமாரசாமி சில உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியலை தயாரித்து அளிக்கும்படி கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டு இருந்தார். அந்த பெயர் பட்டியலை கலெக்டர் களிடம் இருந்து குமாரசாமி பெறுகிறார். பொதுமக்களிடம் தினமும் குறைகள் கேட்கப்படும் என்று குமாரசாமி ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தார்.
இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குறைகள் அடங்கிய மனுக்களுடன் குமாரசாமி வீட்டுக்கு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். சில நாட்கள் குமாரசாமி மக்களிடம் மனுக்களை பெறுகிறார். வேறு ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தால், பொதுமக்களிடம் குறைகள் கேட்பதில் அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் குமாரசாமியை சந்திக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதனால் மாவட்டங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால், விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ள தேவையான விதைகள் மற்றும் உரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவு பிறப்பிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையொட்டி விதான சவுதா வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.