நாமக்கல் டயர் கடையில் ரூ.9.80 லட்சம் மோசடி வாலிபர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

நாமக்கல்லில் உள்ள டயர் கடை ஒன்றில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-29 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் - சேலம் ரோடு முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே டயர் கடை நடத்தி வருபவர் சுப்பிரமணியம் (வயது 47). இவரது கடையில் வேட்டாம்பாடியை சேர்ந்த செல்வகுமார் (23), தினேஷ்குமார் (25), கார்த்தி (26) ஆகிய 3 பேரும் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் பில் இல்லாமல் டயர்களை விற்பனை செய்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக சுப்பிரமணியம் நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

வாலிபர் கைது

அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குலசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று செல்வகுமாரை கைது செய்தனர். தினேஷ்குமார், கார்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்