மாதவரத்தில் மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்தது ரூ.10 லட்சம் மெத்தைகள் தீயில் எரிந்து நாசம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மெத்தைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை மாதவரம் தபால்பெட்டி அருகே உள்ள குடோனில் இறக்குவதற்காக நேற்று காலை வந்தது.

Update: 2018-07-29 21:58 GMT
செங்குன்றம்,

குடோன் நுழைவு வாயிலில் திரும்பியபோது மேலே சென்ற மின்கம்பியில் லாரி உரசியது. இதனால் லாரி தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம், செம்பியம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய மெத்தைகள் தீக்கிரையாகின. விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்