காரைக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடியில் இந்து முன்னணி சார்பில் கோவில் சொத்து கோவிலுக்கே என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் அக்னிபாலா, நகர தலைவர் காசிவிஸ்வநாதன், நகர பொதுச் செயலாளர் தாமரை சரவணன், மாநிலக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.