ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 9 பேர் போதைப்பொருளுடன் கைது

தென்மும்பை கிழக்கு விரைவு சாலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update: 2018-07-28 23:00 GMT
மும்பை,

தென்மும்பை கிழக்கு விரைவு சாலை பகுதியில் நின்ற காரில், சந்தேகப்படும் வகையில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 9 பேர் அமர்ந்து இருந்தனர். போலீசார் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். இதில், 104 கிராம் கோகைன், 9 கிராம் எம்.டி. போதைப்பொருள் மற்றும் கத்திகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது 9 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். எனினும் போலீசார் அவர்கள் 9 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்