மில் ஊழியர், டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி பணம் பறிப்பு - மொபட்டில் வந்த 3 பேர் கைவரிசை
வேடசந்தூர் அருகே மில் ஊழியர், டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி பணம், செல்போன் பறித்து விட்டு மொபட்டில் தப்பிச்சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 20). இவர், வேடசந்தூர் அருகே உள்ள தனியார் மில்லில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்ததும் தனது ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில், சீத்தாமரம்நால்ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது மொபட்டில் வந்த 3 பேர், மோட்டார்சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள், தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் பெரியசாமியை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்து கொண்டு மிரட்டி அனுப்பி விட்டனர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டியில் வசித்து வருபவர் கணேசன் (40). இவர் வேடசந்தூர் அருகே கூம்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் விற்பனையான தொகை ரூ.93 ஆயிரத்தை கடையில் வைத்து பூட்டிவிட்டு ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.
இரவு 10.45 மணியளவில் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தாமரம்நால்ரோட்டை அடுத்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் மொபட்டில் வந்த 3 பேரில் ஒருவன் கணேசனின் முதுகில் உருட்டுக்கட்டையால் தாக்கினான். இதில் நிலை தடுமாறிய கணேசன் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர்கள் மோட்டார்சைக்கிள் முன் குறுக்கே மொபட்டை நிறுத்தினர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து கணேசனை உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர். கணேசன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் ஏற்படவில்லை. உருட்டுக்கட்டையால் தாக்கியபோது கணேசன் தடுத்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கணேசனின் பாக்கெட்டில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.300 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, டாஸ்மாக் கடை வசூல் பணம் எங்கே? என்று கேட்டனர். அப்போது கணேசன் தன்னிடம் வேறு பணம் இல்லை என கூறினார். இதையடுத்து 3 பேரும் அந்த மொபட்டில் ஏறி தப்பிசென்று விட்டனர். காயம் அடைந்த கணேசன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மதுக்கடையில் விற்பனையான ரூ.93 ஆயிரத்தை கடையிலேயே வைத்துவிட்டு வந்ததால் அந்த பணம் தப்பியது. ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவங்களால் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.