ராணிப்பேட்டை சிப்காட்டில் கிராம நிர்வாக அலுவலரின் மகள் ‘திடீர்’ மாயம்

ராணிப்பேட்டை சிப்காட்டில் பெண் கிராம நிர்வாக அலுவலரின் மகள் திடீரென மாயமானார். அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-07-28 22:45 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் ஐ.ஓ.பி. நகர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 32), இவரது கணவர் துளசிநாதன் இறந்து விட்டார். ராஜேஸ்வரி கலவை அருகே முள்ளுவாடியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது 2-வது மகள் சுபிக்‌ஷா (10). இவர் சிப்காட்டை அடுத்த மணியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சுபிக்‌ஷாவை மாலை 5 மணி அளவில் திடீரென மாயமானார். பின்னர் வேலை முடிந்து வந்த ராஜேஸ்வரியும் தனது மகள் சுபிக்‌ஷாவை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் தேடினார்.

எங்கு தேடியும் சுபிக்‌ஷா கிடைக்காததால் ராஜேஸ்வரி இதுதொடர்பாக சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுபிக்‌ஷாவை தேடி வருகின்றனர். வீட்டுக்கு வந்த சுபிக்‌ஷா திடீரென காணாமல் போய்விட்டதால் யாராவது அவரை கடத்தி விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்