புதுப்பேட்டை: கமண்டல நாகநதி தடுப்பணையை ரூ.90 லட்சத்தில் சீரமைக்கும் பணி - அமைச்சர் ஆய்வு
புதுப்பேட்டை பகுதியில் கமண்டல நாகநதி தடுப்பணையை ரூ.90 லட்சத்தில் சீரமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆரணி,
ஆரணி, எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையை சீரமைக்க ரூ.90 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் சென்று பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார், ஒன்றியக்குழு முன்னாள்தலைவர் வக்கீல் கே.சங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, எஸ்.வி.நகரம் ஊராட்சி மன்ற முன்னாள்தலைவர் என்.வாசு உள்பட பலர் உடன் இருந்தனர்.