மேலஊரணிபுரத்தில் 300 தைல மரங்கள் தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை

மேலஊரணிபுரத்தில் 300 தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-28 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேலஊரணிபுரத்தை சேர்ந்தவர் பத்மினி (வயது45). இவருக்கு சொந்தமான தோப்பில் ஏராளமான தைல மரங்கள் (ஆர்.எஸ்.பதி) உள்ளன. அவருடைய வீட்டின் பின்புறம் உள்ள இந்த தோப்பு நேற்றுமுன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகே உள்ள கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். இதில் 300 தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

ஊரணிபுரம் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மதுவை வாங்குபவர்கள் கல்லணை கால்வாய் கரையோரம் உள்ள தோட்டங்களில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு மது குடிப்பவர்கள் சிலர் சம்பவத்தன்று பத்மினிக்கு சொந்தமான தோப்பில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு மரங்களுக்கு தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்