தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அதிக பெண்கள் பயன்படுத்த விழிப்புணர்வு
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயல்படும் தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அதிக பெண்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் முக்கியமான ஆலோசனை ஆகும். எனவே தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் வெளியூர் செல்லும்போது பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே பஸ் நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் பஸ் நிலையங்களில் இதற்காக தனி அறைகள் அமைக்க மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு, அதனை கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3–ந் தேதி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 315 பஸ் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் பிரதான நுழைவுவாயில் அருகே ஒன்றும், 4–வது நடைமேடையின் முகப்பில் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒரு அறையில் 7 பேரும், மற்றொரு அறையில் 8 பேரும் என மொத்தம் 15 பேர் ஒரே நேரத்தில் சொகுசு இருக்கையில் அமர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும். இதற்காக குளுகுளு வசதியுடன் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகளில் சுத்தமான குடிநீர் வசதியும், குழந்தைகளுக்கு உடை மாற்றுவதற்கு என்று சிறிய அறையும் உள்ளது. மேலும் அங்கு 2 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
ஆனால் இத்தனை வசதிகள் இருந்தும் இந்த தாய்ப்பால் ஊட்டும் அறைகளை சிலர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கடந்த 20–ந் தேதி 8 பேரும், 21–ந்தேதி 11 பேரும், 22–ந் தேதி 9 பேரும், 23–ந் தேதி 7 பேரும், 24–ந் தேதி 6 பேரும், 25–ந் தேதி 4 பேரும் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தாய்மார்கள் அதிக அளவில் வருகின்றனர். மற்ற நாட்களில் தாய்மார்கள் வராததால் கோயம்பேட்டில் உள்ள 2 அறைகளில் ஒரு அறை மூடப்பட்டு உள்ளது.
தாய்மார்களின் வருகையை அதிகரிப்பதற்காக வருகிற 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை நடக்கும் தாய்ப்பால் வார விழா கொண்டாட்டத்தின்போது அதிக எண்ணிக்கையிலான தாய்மார்கள் இந்த அறைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:–
போதிய அளவு தாய்ப்பால் இல்லாத மகளிரின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாக கடந்த 2014–ம் ஆண்டு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘தாய்ப்பால் வங்கி’ என்னும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கு தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் தாய்மார்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. அதிகம் பேர் இந்த அறைகளை பயன்படுத்துவதற்காக தாய்ப்பால் வார விழாவின்போது பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.