குமாரசாமி மீதான வழக்கில் ஆகஸ்டு 27-ந் தேதி தீர்ப்பு பெங்களூரு கோர்ட்டு அறிவிப்பு
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார்.
பெங்களூரு,
குமாரசாமி கடந்த 2006-ம் ஆண்டு கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூரு தனிச்சந்திராவில் 3 ஏக்கர் அரசு நிலத்தை பல்வேறு காரணங்களுக்கு ஸ்ரீராம் மற்றும் ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டு இருந்தது. அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, குமாரசாமி, முன்னாள் மந்திரி சென்னிகப்பா மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடந்த 2012-ம் ஆண்டில் லோக் ஆயுக்தா கோர்ட்டில் மகாதேவசுவாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கர்நாடக ஐகோர்ட்டில் குமாரசாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி முதல்-மந்திரி குமாரசாமி மீதான நில முறைகேடு வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்து உள்ளார்.