தஞ்சையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், அதை திரும்பப்பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஒரத்தநாடு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்கிருஷ்ணசாமி, காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நகர அவைத்தலைவர் ஆறுமுகம், மாநில மகளிரணி துணைத்தலைவர் காரல்மார்க்ஸ், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, உலகநாதன், செல்வராஜ், கவுதமன், முரளிதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.