தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைய காரணமான நகராட்சியை கண்டித்தும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், முன்னாள் துணை வேந்தர் சபாபதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் புவனகிரி மனோகரன், மேற்கு மதியழகன், காட்டுமன்னார்கோவில் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், நகர பொருளாளர் ஜாபர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க மற்றும் விருத்தாசலம் நகர தி.மு.க. சார்பில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், மாவட்ட பொருளாளர் பாவாடைகோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். இதில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல், வழக்கறிஞர் அணி ரவிச்சந்திரன், வள்ளலார் குடில் இளையராஜா, இளைஞரணி ஆனந்தன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கதிரவன், நகர நிர்வாகிகள் ஆட்டோ பாண்டியன், நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரியை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை உடனே வாபஸ்பெறக்கோரியும் கோஷமிட்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.
கடலூர் நகர தி.மு.க. சார்பில் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகர், நகர பொருளாளர் சலீம், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர துணை செயலாளர்கள் அஞ்சாபுலி, சுந்தரமூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஜி.ஆர்.சுந்தர், மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன், மாணவர்அணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் கோவலன், ரெங்கநாதன், ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் மணிமாறன், ஒன்றிய துணை செயலாளர் குணா, மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெயசீலன், ஜெயச்சந்திரன், பிரசன்னா, மகளிர் அணி துணை அமைப்பாளர் எல்சா, நகர மகளிர் அணி விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் நந்தகோபால கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்தி சரவணன், தணிகைசெல்வம், அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், தலைமைக்குழு உறுப்பினர் பல ராமன், பொருளாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முன்னாள் கவுன்சிலர் சிவா தலைமையில் பண்ருட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, சங்கர் மற்றும் ராம் குமார், இளைஞரணி தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் திரைப்பட சங்க பொதுச்செயலாளர் மாருதி ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் பழனிவேல், அங்கமுத்து, நகர அவைத்தலைவர் ஷேக்மொய்தீன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், நிர்வாகிகள் ராமு, கோபாலகிருஷ்ணன், வேலு, முகமது யாசின், பூபாலன், பழனி, முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து புதுப்பேட்டையில் தி.மு.க. நகர செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமிழக அரசின் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். இதில் மாவட்ட பிரதிநிதி ராகவன், விவசாய அணி துணை அமைப்பாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.