தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-07-27 22:15 GMT
புதுக்கோட்டை,

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் 2-வது கட்ட மாவட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்து உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்விற்கான தரவரிசை மற்றும் நிகழ்ச்சி நிரலும் இணைய தளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற் பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டு உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே தற்போது 2-வது கட்ட மாவட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்