கல்வித்துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை மாற்ற வேண்டும்
கல்வித்துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
கல்வித்துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைமையிட செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் வரவேற்று பேசினார்.
இடமாற்றம்கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் ஆகிய அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழக அரசின் இலவச நலத்திட்ட பொருட்களை பள்ளிக்கூடங்களுக்கு ஒரே நேரத்தில் நேரடியாக கொண்டு வந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் மனோகரன், ராஜ்குமார், ஆசீர் சார்லஸ் நீல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மானூர் வட்டார செயலாளர் அண்ணாத்துரை நன்றி கூறினார்.