இந்தியாவில் 2,626 புலிகள் மட்டுமே உள்ளன அதிகாரி தகவல்
இந்தியாவில் 2,626 புலிகள் மட்டுமே உள்ளன என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் கூறினார்.
களக்காடு,
இந்தியாவில் 2,626 புலிகள் மட்டுமே உள்ளன என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் கூறினார்.
புலிகள் தின விழா
களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில், உலக புலிகள் தின விழா களக்காடு தலையணையில் நடந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர்கள் களக்காடு புகழேந்தி, கோதையாறு பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூழல் மேம்பாட்டு திட்ட வனவர் அப்துல்ரகுமான் வரவேற்றார்.
விழாவில், புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் பேசியதாவது:–
2,626 புலிகள்
இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் 2,626 புலிகள் மட்டுமே உள்ளன. எனவே புலிகளை பாதுகாப்பது குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்காகவே மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புலிகளை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு வனம் மற்றும் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.