தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக கண் வங்கி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக கண்வங்கியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக கண்வங்கியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கண் வங்கிதூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடி தொழிற்சாலை சார்ந்த நோய்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக 10 படுக்கைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் கூடிய தனி நெஞ்சக நோய் பிரிவு ரூ.1 கோடியே 39 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. சிறுநீரக துறை ரத்த சுத்திகரிப்பு பிரிவில் ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் செலவில் நவீன உபகரணங்களும், ரூ.2 லட்சத்து 96 ஆயிரம் செலவில் கனரக சலவை எந்திரம், உலர்த்தும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று தூத்துக்குடியில் முதல் முறையாக உறுப்புதான சிகிச்சையின் ஒரு பகுதியாக கண்தான வங்கி அமைக்கப்பட்டு உள்ளது.
தொடக்க நிகழ்ச்சிஇந்த திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். டீன் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பான சிகிச்சைபின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை மருத்துவத்துறையின் தலைநகரம் என்று போற்றப்படும் அளவுக்கு உருவாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று அரசு சாதனை படைத்து உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற இலக்கோடு, புதுக்கோட்டை, கரூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை அரசு உருவாக்கி உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பொதுமக்கள் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக பாராட்டுகிறார்கள். தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த பிரச்சினையின் போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக தொழிற்சார் நெஞ்சக நோய் பிரிவு இங்கு தொடங்கப்பட்டு உள்ளது. ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.