ரூ.8 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது
கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை சிவ்ரி அருகே அப்துல்ரகுமான் தெருவில் உள்ள கடை ஒன்றில் சம்பவத்தன்று பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கடையின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.8 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், கொள்ளையர்களின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட நதீம் சகீர்கான் (வயது22), முகமது நபீஸ் நூர்(20), முகமது சேக்(20) ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.