சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்களை அனுமதிக்காவிட்டால் சட்ட சிக்கல் கிரண்பெடி பேட்டி

புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்காவிட்டால் அது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Update: 2018-07-26 23:39 GMT
சென்னை,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, சென்னை விமான நிலையத்தில் நிருபர் களிடம் கூறியதாவது.

புதுச்சேரியை தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. புதுச்சேரிக்கு தனி மாநிலம் மற்றும் சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்கள். நீண்ட காலமாக யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இந்திய அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே இதுபற்றி நாடாளுமன்றத்தில்தான் முடிவெடுக்க முடியும். இது ஒரு சிக்கலான விஷயம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அது தொடர்பாக வலியுறுத்துவார்கள். இந்த விவகாரமாக நான், டெல்லி செல்லவில்லை. டெல்லியில் 100 இளம் காவல்துறை கண்காணிப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது. அதன்படி வருகின்ற 30-ந் தேதி நடக்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் அனு மதிக்காவிட்டால் அதுசட்ட சிக்கலை ஏற்படுத்தும். எனவே அவர்களை புதுவை அரசு அனுமதிக்கும் என நம்பு கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்