கல்விப்பணி திருப்திகரமாக இல்லையென்றால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் - முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
கல்விப்பணி திருப்திகரமாக இல்லையென்றால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போளூர், செங்கம், ஆரணி மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி துணை ஆய்வாளர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது:-
ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ள பள்ளிகளுக்கு மாணவர் குறைவாக உள்ள பிற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை தேவை உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுப்பணி நியமனம் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவர், 2 மாணவர்கள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டு அந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை தேவை உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. அதனால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும். புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த பல ஆண்டுகளாகவே ஜவ்வாதுமலை ஒன்றியம் கல்வியில் பின்தங்கி இருக்கிறது. இந்த ஆண்டு அந்த நிலையை மாற்ற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் கல்விப்பணி திருப்திகரமாக இல்லையென்றால் ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கல்விப்பணியை சரியாக செய்யாத ஆசிரியர்கள் தான் பிற வேலைகளை யெல்லாம் செய்கிறார்கள். அதனால் ஆசிரியர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து குறைபாடு உள்ள ஆசிரியர்கள் தங்களை திருத்தி கொள்ள அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.
அனைத்து பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதில் குறை ஏற்பட்டால் பெற்றோர்கள் முறையிடுகின்றனர். அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு வட்டார கல்வி அலுவலர்களையே சாரும். சரியாகச் செயல்படாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் இருந்து எந்த குழந்தையும் தனியார் பள்ளிக்கு செல்லவில்லை. அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள் என்று வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார். அவ்வாறு ஒவ்வொரு பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் மேற்கண்டவாறு தங்கள் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து எந்தவொரு குழந்தையும் தனியார் பள்ளிக்கு செல்லவில்லை, அரசு பள்ளியிலேயே படிக்கிறார்கள் என்ற பட்டியலை உடனடியாக மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.