தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் தடுத்து நிறுத்தம்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பால் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாகூர்,
பாகூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார், வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் மணல் கடத்தல் தொடர் கரையாக நடைபெற்றது.
இந்த நிலையில் புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சுந்தரி நந்தா சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடைபெறும் பகுதியை நேரடியாக பார்வையிட்டார். இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
இதையடுத்து பாகூர் அருகே சோரியாங்குப்பம் - குருவிநத்தம், சோரியாங்குப்பம் - பாகூர் ஆகிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வருவாய் துறை அதிகாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய ஐ.ஆர்.பி.என். போலீசாரும் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். போலீசாரின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் நேற்று முன்தினம் நள்ளிரவு சோரியாங்குப்பம் சோதனை சாவடி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரிடம் மணல் கடத்தல் நடக்கிறதா? என்று விசாரித்தார். தற்போது மணல் கடத்தல் நடைபெறவில்லை என்று கூறினர். தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்குமாறு போலீசாரை அவர் அறிவுறுத்தினார். முன்னதாக தெற்கு பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் ஆய்வு செய்தார்.