சென்னை வந்த விமானத்தில் பேரீச்சம்பழ டப்பாவில் மறைத்து 1 கிலோ தங்க கட்டிகள் கடத்தல்
குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பேரீச்சம்பழ டப்பாவில் மறைத்து வைத்து 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை கடத்தி வந்தவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
நேற்று காலை குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சர்புதீன்(வயது 36) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கஇலாகா அதிகாரிகள், அவரது சூட்கேசை சோதனை செய்தனர்.
அதில் 2 பேரீச்சம்பழ டப்பாக்கள் இருந்தது. அவற்றை திறந்து பார்த்தபோது, பேரீச்சம் பழத்துடன் 5 பெரிய தங்க கட்டிகள், 1 சிறிய தங்க கட்டி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதே விமானத்தில் குவைத்தில் இருந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சகுந்தலா(40) என்ற பெண்ணின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடைகொண்ட தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சர்புதீனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். அவர் யாருக்காக தங்க கட்டிகளை குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.