சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொரடாச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-26 22:45 GMT
கொரடாச்சேரி,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சொத்து வரியை உயர்த்தியது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரி உயர்வுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் துரை.கதிர்வேல், ஜெயபால், கோவி.மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்