திருத்துறைப்பூண்டியில் தீ விபத்து: 5 கூரை வீடுகள், மளிகை கடை எரிந்து நாசம்
திருத்துறைப்பூண்டியில் நடந்த தீ விபத்தில் 5 கூரை வீடுகளும், மளிகை கடையும் எரிந்து நாசமாயின. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.;
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த மளிகை கடைக்கு அருகே அவருடைய கூரை வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு கருப்பசாமியின் வீட்டு கூரையில் திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ மளமளவென அருகில் உள்ள தங்கமாரியப்பன், அருணாசலம், ஜோதி, கோவிந்தராஜ் ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. மளிகை கடையும் தீப்பிடித்து எரிந்தது.
ஒரே நேரத்தில் 5 கூரை வீடுகள் மற்றும் மளிகை கடை தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 5 கூரை வீடுகளும், ஒரு மளிகை கடையும் முற்றிலும் எரிந்து நாசமானது. கூரை வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகை கடையில் இருந்த பொருட்கள் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.