ஐ.ஏ.எஸ். தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மாதவரத்தில், ஐ.ஏ.எஸ். தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செங்குன்றம்,
சென்னை அடுத்த மாதவரம் செல்வம் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னை கூட்டுறவு சங்க சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோன்மணி. டாஸ்மாக் அதிகாரி. இவர்களது மகன் விக்னேஷ்வரன் (வயது 27).
இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வெளியானது. இதில் விக்னேஷ்வரன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்குவதற்காக தனது அறைக்கு சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தி அறையின் கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
அப்போது அங்கு விக்னேஷ்வரன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.