ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பக்கோரி தேர்வை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
அரசு பள்ளியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பக்கோரி மாணவ-மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு அருகே சுக்காம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுக்காம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 558 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 11, 12-ம் வகுப்புகளில் மட்டும் 174 பேர் படித்து வருகின்றனர். இந்த 2 வகுப்புகளுக்கும் 6 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் எனவும், ஆனால், 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 3 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டாவது ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று 11, 12-ம் வகுப்புகளுக்கு முதல் இடைபருவத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் தேர்வு எழுத மாட்டோம் என்று தேர்வை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்பு என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் வைத்திருந்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் திரண்டு வந்து நின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் வந்து ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பிடிவாதமாக கூறினர்.
அதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரி நிர்மலா மற்றும் புத்தாநத்தம் சப்-இனஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற திங்கட்கிழமைக்குள் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று கூறியதை அடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.
அப்போது பெற்றோர் தரப்பில், பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இயற்கை உபாதைக்கு கூட மாணவிகள் திறந்த வெளிப்பகுதிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரியிடம் கூறினர். அதற்கு கல்வித்துறை அதிகாரி, அதை மனுவாக எழுதி கொடுங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று கூறினார்.